விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண் அதிகாரி அறிவிப்பு

by Gingee

திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
விவசாயிகள் அதிக மகசூல் பெற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும்.

இதன் மூலம் குறைந்த விதை அளவு, சீரான மற்றும் வேகமான முளைப்புத்திறன், பயிர் எண்ணிக்கை, ஒருமித்த பூக்கும் தன்மை, சீரான முதிர்ச்சிப்பருவம், குறைவான பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் 15 முதல் 20 சதவீதம் வரை அதிக மகசூல் ஆகிய நன்மைகளை பெறலாம்.

விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இவை, விதைச்சான்று அலுவலர்களால் வயல் ஆய்வில், தரம் உறுதி செய்யப்பட்டு, விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி தேவையான பயிர் எண்ணிக்கையினை பராமரிக்கலாம்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை மாதிரி ஒன்றுக்கு 80 ரூபாய் ஆய்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் உள்ள மூத்த வேளாண்மை அலுவலரை அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment