வாழ்வியல் முறையை மாற்றினால் நோயற்ற வாழ்வு வாழலாம்

by Gingee
gingee 2

சித்த மருத்துவ அதிகாரி அறிவுரை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் அகத்தியர் பிறந்த தினத்தையொட்டி 9 வது சித்த மருத்துவ தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார் .

சிறப்பு அழைப்பாளர்களாக செஞ்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் டாக்டர். அஜித்தா ரமேஷ் பாபு மற்றும் டாக்டர். சுமதி சிறப்புரையாற்றினர்.டாக்டர் அஜித்தா ரமேஷ் பேசும்போது,
உலகளாவிய மருத்துவத்தில் நமது இந்திய சித்த மருத்துவம் என்றும் சிறப்பு பெற்றுள்ளது. மேலும் காலை முதல் இரவு வரை நமது வாழ்வியல் முறையை கடைப்பிடித்தால் நோயற்ற வாழ்க்கை வாழலாம். குறிப்பாக அதிகாலை எழுதல், யோகாசனம், உடற்பயிற்சி, நல்ல உணவுகள் உண்ணுதல்,போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் துரித உணவுகள் சாப்பிடக்கூடாது. ஆரோக்கியமான தின்பண்டங்கள் சாப்பிட வேண்டும் என்றார்.

மேலும் அன்றாடம் பயன்படுத்தும் மூலிகை செடிகளின் பயன்கள் பற்றி மாணவர்களுக்கு அவர் விளக்கமளித்தார். நிகழ்ச்சி யில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஏழுமலை ஆசிரியர்கள் செந்தில், பாலா, வடிவேல் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்/

Related Posts

Leave a Comment