செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவள்ளூர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் திருவள்ளுவரின் திருவருவப் படத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, நகர செயலாளர் கார்த்திக், பொருளாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சீனுவாசன், பொன்னம்பலம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பெருங்காப்பூர் ராஜேந்திரன், திமுக நிர்வாகிகள் சிங்கம் சேகர், சிவகுமார், பத்மநாபன், சீனிவாசன், பாலகிருஷ்ணன், செழியன், தொண்டரணி பாஷா, மணி, நரசிம்பன், கோகுல், ராம்குமார், செந்தில், சக்திவேல், செல்லன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்