ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ & மாணவிகளுக்கு சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

by Gingee

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒலக்கூர் அரசு  மேல் நிலைப் பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி   சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவ-&மாணவியர்கள் மற்றும், காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர், தவமணி, நீல மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வன் கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் மாணவர்களுக்கு சமூக நீதி தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Posts